Onetamil News Logo

பெண் போலீசை திருமணம் செய்வதாகக் கூறி காதல் செய்து பலமுறை கற்பழிப்பு ; வேறு சாதி என்பதனால் திருமணம் செய்ய மறுப்பு ;போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்

Onetamil News
 

பெண் போலீசை திருமணம் செய்வதாகக் கூறி காதல் செய்து பலமுறை கற்பழிப்பு ; வேறு சாதி என்பதனால் திருமணம் செய்ய மறுப்பு ;போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்


பெங்களூரு, 2018 ஜூன் 12 ;பெங்களூருவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீஸ் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு நகரில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் 26 வயது பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்த அமீன்ஷாப் (வயது 32) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக அமீன்ஷாப் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். அத்துடன் உப்பார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து அந்த பெண்ணை, அமீன்ஷாப் பல முறை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெண் போலீஸ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதாலும், அவரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி அமீன்ஷாப் திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும், அமீன்ஷாப்பின் குடும்பத்தினர் பெண் போலீசை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்தில், போலீசான அந்த பெண் அமீன்ஷாப், அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில், அமீன்ஷாப், அவரது தாய் காதுன்பீவி, சகோதரி மும்தாஜ் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo