Onetamil News Logo

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11  பக்தர்கள் பலி..!  ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தனர். பரபரப்பு 

Onetamil News
 

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11  பக்தர்கள் பலி..!  ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தனர். பரபரப்பு 



கர்நாடகா  2018 டிசம்பர் 15 ; கர்நாடகா –தமிழக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் ஹனூர் தாலுகவில் உள்ள சுல்வாடி மார்டள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
பக்தர்களுக்காக காய்கறி புலாவ் தயாரித்து பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாப்பிட்டனர். பிரசாதம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தனர்.
இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மைசூரு கே.ஆர்.மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
பிரசாரம் சாப்பிட்டு வீட்டுக்கு சென்ற பக்தர்களில்  80க்கும் மேற்பட்டோருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும் மருத்துவமனையில்  சிகிச்சை்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo