Onetamil News Logo

கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு 

Onetamil News
 

கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாக உள்ள 130 திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு 


கர்நாடகா  2018 ஜூன் 6 ; காலா படத்தை கர்நாடகாவில் திரையிட  மாநில முதலமைச்சர் குமாரசாமி உதவ வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், காலா திரைப்படம் நாளை கர்நாடக மாநிலத்தில் இன்று 130 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று ரஜினி கூறியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவை எச்சரித்துள்ளன. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் காலா திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் காலா படத்தை வெளியிட தற்போது சரியான சூழல் கர்நாடகாவில் இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் பேசிய ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையே தான் கூறியதாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் திரைப்படங்கள் வெளியாக உறுதுணையாக இருக்க வேண்டிய கர்நாடக பிலிம்சேம்பர் காலாவுக்கு எதிராக இருப்பதை ஏற்க முடியாது என்று ரஜினி கூறியுள்ளார். மேலும் காலா படத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மொழியிலும் ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கிடையே காலா திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர் கனக்புரா ஸ்ரீனிவாஸ் முடிவு செய்துள்ளார். இன்று 130 திரையரங்குகளில் காலா படம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 
இதனிடையே காலா படத்தின் கதைக்கு உரிமை கோரி ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ளது. மேலும் காலா படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறிவிட்து.
இதனிடையே, பெங்களூருவில் காலா பட விநியோகஸ்தர் அலுவலகத்தை கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் சூறையாடினர். காலா பட போஸ்டரையும் கிழித்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். 
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலா திரைப்படத்துக்கு தடை கோரி ரமேஷ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். நாடார் சமூகம் குறித்தும் மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவர் பற்றியும் படத்தில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணையின்போது, விளம்பர நோக்குடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், படத்தில் எந்த சாதி அல்லது அமைப்பு பற்றியும் குறிப்பிடப்படவில்லை என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் திரவியம் நாடார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் கூறப்பட்டது. அப்போது திரவியம் நாடாரின் மகன் ஜவகரின் ஒப்புதலுடனேயெ வழக்கு தொடரப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜவகரின் ஒப்புதல் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை வேறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo