Onetamil News Logo

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு  ;  தேசிய தலைவராக எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவராக கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தேர்வு 

Onetamil News
 

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு  ;  தேசிய தலைவராக எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவராக கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தேர்வு 


                                                                                   
 தூத்துக்குடி 2018 ஜூலை 8;  எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு ;தேசிய தலைவராக எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவராக கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தேர்வு செய்யப்பட்டனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் தேசிய பொதுக்குழு கூட்டம் ஜூலை 7,8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. தேசிய தலைவர் எ.சயீத் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தேர்தல் அதிகாரி முகமது ஷாகிப் தேர்தலை நடத்தினார். இதன்படி நடைபெற்ற தேர்தலின் முடிவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய தேசிய தலைவராக கேரளாவை சேர்ந்த எம்.கே.ஃபைஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய துணைத் தலைவராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில துணைத் தலைவரான கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பெங்களூரை சேர்ந்த பேராசிரியை நாஸ்னி பேகம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஷர்ஃபுதீன் அகமது, டெல்லியை சேர்ந்த ஆர்.பி.பாண்டேயா ஆகியோரும் தேசிய துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய பொதுச் செயலாளர்களாக ராஜஸ்தானை சேர்ந்த முகம்மது ஷஃபி, மைசூரை சேர்ந்த அப்துல் மஜீத் ஆகியோரும், தேசிய செயலாளர்களாக அப்துல் வாரிஸ் (ஆந்திரா), அல்போன்ஸோ ஃப்ரன்கோ (கர்நாடகா), டாக்டர் மகமூத் ஷெரிப் ஆவாத் (கர்நாடகா), யாஸ்மின் ஃபரூக்கி (ராஜஸ்தான்), சீதாராம் கோய்வால் (ராஜஸ்தான்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசிய பொருளாளராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஷாஜித் சித்திக்கீ தேர்ந்தெடுக்கப்பட்டார். 
மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் முகமது முபாரக், மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் சத்தார் உட்பட 32 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு,மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர், ஏ.கே. கரீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo