Onetamil News Logo

கவிப்பேரரசு வைரமுத்து 66வது பிறந்தநாள் ;7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவருக்கு இன்று ஜூலை 13 ம் தேதி பிறந்தநாள் 

Onetamil News
 

கவிப்பேரரசு வைரமுத்து 66வது பிறந்தநாள் ;7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவருக்கு இன்று ஜூலை 13 ம் தேதி பிறந்தநாள் 


சென்னை 2020 ஜூலை 13 ;தமிழ்சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள கவிஞர் காலத்தால்  அழியாத பல பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், சுயசரிதை, தொகுப்பு நூல் என தமிழில் பல பரிணாமத்தில் வைரமுத்துவை காணலாம்.
 அவருக்கு  பிறந்தநாள் அவரை போற்றி நினைவுகூறும் வகையில் தேடல்களில் கிடைத்த தகவல்கள்.
ஒரு புதுக்கவிதை பாடலாக முதல் வரலாற்று பெருமை பெற்றது வைரமுத்துவின் " என் பெயரே எனக்கு மறந்துபோன..." என்ற கவிதைதான். இதுவரை 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.  ஐ.நா சபையில் நடந்த இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின விழாவில், கவிஞர் வைரமுத்து எழுதிய வெள்ளைப்பூக்கள் உலகமெங்கும் மலர்கவே, என்ற பாடலைத்தான் ஏ ஆர் ரகுமான் பாடினார், அவரின் படைப்புகளில் கள்ளிக்காட்டு இதிகாசம் , கருவாச்சி காவியம் ஆகியவை இரட்டை காப்பியங்களாக போற்றப்படுகின்றன. இதில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த புத்தகத்திற்கான " பிக்கி " விருதுக்கும் தேர்வு பெற்றுள்ளது.
இவரின் மற்ற படைப்புகளான மூன்றாம் உலகப் போர் , தண்ணீர் தேசம்  தமிழுக்கும் நிறமுண்டு  இந்த பூக்கள் விற்பனைக்கல்ல ,தமிழாற்றுப்படை , சிறுகதைகள் , போன்றவை தமிழுக்கும் , தமிழ் இலக்கியத்துக்கு  மணிமகுடம் சூட்டியவை. இவரது பல கவிதைகள் தமிழக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் பாடங்களாக உள்ளன .முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ,முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் பல அறிஞர்களால் புகழப்பட்டுள்ளார். இவர்  இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.
முதல் மரியாதை படத்தில் இடம் பெற்ற "பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா" உள்ளிட்ட அணைந்து பாடல்களுக்கும்
கருத்தம்மா படத்தில் " போறாளே பொண்ணுத்தாயி பொல பொல வென்று கண்ணீர் விட்டு"
ரோஜா படத்தில் " சின்ன சின்ன ஆசை"
சங்கமம் படத்தில் " ஒரு முறைக் கிள்ளிப் பார்த்தேன்"
பவித்ரா படத்தில் " உயிரும் நீயே , உடலும் நீயே , உறவும் நீயே தாயே"
தர்மதுரை படத்தில் " எந்தப்பக்கம் " கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் " ஒரு தெய்வம் தந்த பூவே",  "விடை கொடு எங்கள் நாடே,கடல் வாசல் தெளிக்கும் வீடே,பனைமர காடே , பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா என்று ஈழத்தில் தமிழர்கள் சொந்த நாட்டை விட்டு புறப்படும் போது பாடுவதாக அமைந்த பாடல் தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் " கள்ளிக்காட்டில் பிறந்த தாயே" ஆகிய பாடல்கள் தேசிய விருதுகள் பெற்றவை
 தமிழக அரசின் விருதை ஆறுமுறை பெற்றுள்ளார் . இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்ற ஒரே தமிழ் கவிஞர் இவரே. தமிழுக்கு  " நோபல் பரிசை " கொண்டுவந்து சேர்க்க வாழும் கடைசி துருப்புச் சீட்டு நம் வைரமுத்துதான் என கவிஞர் சுரதா குறிப்பிட்டுள்ளார்
வாழ்க கவிஞர் வைரமுத்து கலைஞரும் , கவிஞரும் ஊட்டிய தமிழ்பிள்ளை
திருநீர்மலை ஜெயக்குமார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo