தாய் தமிழ் கவிதை ;தி.ஆனந்த ஜோதி திவ்யா,2ம் ஆண்டு, வரலாற்றுத்துறை,ஏ.பி.சி.மகாலெட்சுமி மகளிர் கல்லூரி,தூத்துக்குடி
இன்னொருபிறப்பு இருந்தால்
தவமேனும் செய்தாவது தமிழனாய்
பிறக்கவேண்டும்
தரணிஎங்கும் சென்று
தமிழின் சிறப்பையாவரும்
அறிய செய்யவேண்டும்
ஒரு சொல்லில் ஓராயிரம்
பொருள் தருவது எங்கள் தமிழ்
சொல்லில் பொருளில் எழுத்தில்
இனிமைதருவது எங்கள் மொழி
சிந்திக்க தூண்டும் மொழி
அறிவை வளர்க்கும் மொழி
அமிழ்தினும் இனிதாய் பேரானந்தம்
தருவது எங்கள் மொழி
பாமரனையும் பாவலன் ஆக்கிய
செம்மொழியாம் எங்கள் தமிழ்
மன்னாதி மன்னருக்கு கவி
பாடியது எங்கள் தமிழ்
தொன்மையான மொழி மேன்மையான மொழி
வாழும் மொழி தமிழ்
ஆழமான பொருள் நிறைந்த அதிசய
கோட்பாடுகள் கொண்டமொழி
அதிகார ஆணவங்களை தன் மதியால்
தகர்த்தெறிந்த மொழி தமிழ்!