Onetamil News Logo

காய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.     

Onetamil News
 

காய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.       


காயல்பட்டிணம் 2020 மார்ச் 29 ;தூத்துக்குடி மாவட்டம்,காயல்பட்டிணம் நகராட்சி மற்றும் திருச்செந்தூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் காய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில்  பொதுமக்களுக்கு அத்தியாவசிய  தேவையான காய்கறிகள் விற்பனை செய்யும் வகையில் பழைய காய்கறி மார்க்கெட் பகுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு அந்த அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அல்லது பள்ளி மைதானத்தில் வைத்து பொதுமக்கள் சமூக இடவெளியை கடைபிடித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி காயல்பட்டிணம் நகராட்சி மற்றும் திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள் காய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது இங்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பின்னர் உடனடியாக இப்பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஆய்வு செய்தார்.
மேலும்  காயல்பட்டிணம் நகராட்சி மற்றும் திருச்செந்தூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில்  பேருந்து நிலையம் பகுதிகள் மட்டுமின்றி தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி தனப்பிரியா, காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் புஸ்பலதா, னுஊறு உதவி செயல் அலுவலர் சீனிவாசன், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கராஜ், திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபால், காயல்பட்டிணம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் சுதகர்,    திருச்செந்தூர் பேரூராட்சி சுகதார அலுவலர் வெற்றிவேல் முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo