Onetamil News Logo

மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். 

Onetamil News
 

மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். 


கயத்தாறு  2020 வியாழக்கிழமை மே 4  ;தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். மேலும் ரூ.35.28 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட கயத்தாறு மற்றும் நாலாட்டின்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்கள். 
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் நாலாட்டின்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் கோவைட் 19 கடன் வழங்கும் விழா மற்றும் நவீனமயமாக்கப்பட்ட புதிய கூட்டுறவு வங்கி கட்டிடம் திறப்பு விழா இன்று (04.06.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு, கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில ரூ.15 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் மற்றும் நாலாட்டின்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில் ரூ.20.28 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலும், மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 504 பயனாளிகளுக்கு; கோவைட் 19 சிறப்பு மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன் உள்ளிட்ட கடன் உதவிகள் என ரூ.2.10 கோடி மதிப்பிலும், நாலாட்டின்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 39 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளையும் வழங்கினார். 
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது: 
 தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் சுய ஊரடங்க உத்தரவு காலத்தில் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில்கொண்டு பல்வேறு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டார்கள்.  அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறையின் மூலம் கோவைட் 19 மகளிர் சுய உதவிக்குழு சிறப்பு கடன் உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இன்று கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறந்து வைத்து தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 504 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடி மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளை வழங்கப்பட்டது. மேலும்  நாலாட்டின்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து ரூ.20.28 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 39 பேருக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிவ் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கடன் உதவிகளை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முறையாக பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் முனைவர் ரவிசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரமனிதேவி, முதன்மை வருவாய் அலுவலர் அருள்சேசு, பொது மேலாளர் வெற்றிவேல், கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரியா, சந்திரசேகர், கோவில்பட்டி சரக துணை பதிவாளர் ஜெயசீலன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜ்,கயத்தாறு வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், நாலாட்டின்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், துணை தலைவர் முத்துசாமி, செயலாளர் மாரிமுத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் தேவராஜ், (கயத்தாறு), வெள்ளைசாமி, பாலாஜி(நாலாட்டின்புதூர்) முக்கிய பிரமுகர்கள் வினோபாஜி, குருராஜ், சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo