Onetamil News Logo

கயத்தார் ஊராட்சி ஒன்றியம் ஒட்டுடன்பட்டி, நொச்சிகுளம் மற்றும் கயத்தார் பேரூராட்சி புதுக்கோட்டை, அரசங்குளம்  ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடை;  அமைச்சர்  துவக்கி வைத்தார். 

Onetamil News
 

கயத்தார் ஊராட்சி ஒன்றியம் ஒட்டுடன்பட்டி, நொச்சிகுளம் மற்றும் கயத்தார் பேரூராட்சி புதுக்கோட்டை, அரசங்குளம்  ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடை;  அமைச்சர்  துவக்கி வைத்தார். 


தூத்துக்குடி 2020 நவம்பர் 19 ;தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றியம் ஒட்டுடன்பட்டி, நொச்சிகுளம் மற்றும் கயத்தார் பேரூராட்சி புதுக்கோட்டை, அரசங்;குளம்  ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடையினை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றியம் ஒட்டுடன்பட்டி, நொச்சிகுளம் மற்றும் கயத்தார் பேரூராட்சி புதுக்கோட்டை, அரசங்;குளம் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு, அம்மா நகரும் நியாய விலைக்கடையினை துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.  
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  தெரிவித்ததாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர் 20ம் தேதி சென்னையில் தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை துவக்கி வைத்தார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 84 பகுதிகளுக்கு அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 11,905 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளார்கள். இன்று கயத்தாறு ஒன்றியம் ஒட்டுடன்பட்டியில்; 105 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும்,   நொச்சிகுளத்தில் 80 குடும்ப அட்டைதாரர்கள்; பயன்பெறும் வகையிலும்,  கயத்தாறு பேரூராட்சி புதுக்கோட்டையில் 150 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும், அரசங்குளத்தில் 75 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 24.02.2014 அன்று சென்னையில் முதன்முதலாக நகரும் நியாய விலைக்கடைகளை துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் 48 மலைவாழ் பகுதிகளுக்கு சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியாய விலைக்கடை அதிகம் தூரம் உள்ள கிராமப்பகுதிகளுக்கு இத்திட்டத்தினை தொடங்கி வைத்து பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலேயே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கும் உன்னத திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இதற்கு அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் என்றும் பெயரும் வைத்துள்ளார்கள். 
அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் தங்கள் பகுதிக்கு குடிமைப்பொருட்கள் வழங்கப்படும் நாள் தங்களுக்கு தெரிவிக்கப்படும். வாகனம் வரும் அன்று அனைவரும் குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அன்று பல்வேறு சூழ்நிலையில் குடிமைப்பொருட்கள் வாங்க இயலாதவர்கள் வெளியூர் செல்ல வேண்டிய பணிகள் உள்ளவர்கள் மற்ற தினங்களில் தங்களது பகுதியில் உள்ள தாய் நியாய விலைக்கடைகளில் குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து கயத்தார் ஊராட்சி ஒன்றியம் ஒட்டுடன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய குற்ற எண் 386/2020 தொடர்பான வழக்கில் விளாத்திக்குளம் வட்டம் துவரந்தை கிராமத்தை சேர்ந்த கொலையுண்டு இறந்த பச்சமால், த/பெ.சங்கரலிங்கம் என்பவரின் மனைவி ஆவுடையம்மாள் என்பவருக்கு வன்கொடுமை தீருதவி தொகை ரூ.4,12,500/- காசோலையினை வழங்கினார். ஒட்டுடன்பட்டியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார்.  தொடர்ந்து கயத்தாறு பேரூராட்சி அரசங்குளத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் 7 மகளிருக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிசந்திரன், துணை பதிவாளர்கள் ஜெயசீலன், மாரியப்பன், கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, வட்டார வளர்ச்சி அலுவலர்; சீனிவாசன், முக்கிய பிரமுகர்கள் வண்டானம் கருப்பசாமி, வினோபாஜி, கப்பல் ராமசாமி, செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo