Onetamil News Logo

மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அன்னாரது 310வது பிறந்தநாள் விழா ;மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அன்னாரது 310வது பிறந்தநாள் விழா ;மாலை அணிவித்து மரியாதை 


தூத்துக்குடி2020 ஜூலை 11 ; தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அன்னாரது 310வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அன்னாரது 310வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (11.07.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். 
பின்னர்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது:
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் பிறந்தநாள் அன்று அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அம்மா அவர்களின் அரசு நாட்டுக்காக இன்னுயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மணிமண்டபங்கள், நினைவுத்தூண்கள் கட்டப்பட்டு அவர்களது வரலாற்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான விடுதலைப்போராட்ட தியாகிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமண்டபங்களில் நூலகங்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.  அம்மா அவர்களின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ரூ.72.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பதுடன், ஒரு நூலகம் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் நினைவில்லம் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளும்,  கயத்தாரில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மணிமண்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று கயத்தார் ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், கயத்தார் வட்டாட்சியர் பாஸ்கரன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நி.சையத் முஹம்மத், கட்டாலங்குளம் ஊராட்சி தலைவர் தம்பா, முக்கிய பிரமுகர்கள் வினோபாஜி, குருராஜ், சுப்புராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo