Onetamil News Logo

கயத்தாரில் வியாபாரி  உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை

Onetamil News
 

கயத்தாரில் வியாபாரி  உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ;டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை


தூத்துக்குடி 2020 ஜூலை 6 ;கயத்தாறில் வியாபாரி உட்பட இருவர்க்கு கொரோனா தொற்று உறுதி 
கயத்தாறு பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மேலத்தெருவில் 25 வயது வாலிபர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இவருடன் தொடர்புடைய குடும்பத்தினர்க்கு பரிசோதனை செய்யப்பட்டதில் வாலிபரின் 54 வயதுடைய அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள 45 வயதுடைய வாலிபர்க்கு கடந்த 2-ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் இந்திரா மற்றும் மகாலட்சுமி ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு நபர்களையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.வியாபாரியுடன்  தொடர்பிலுள்ள 8 பேர்க்கு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.கயத்தாறு பகுதியிலிருந்து கங்கைகொண்டான் தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 54 நபர்களுக்கு கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போலீஸ்காரர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்ததால் போலீஸ்காரர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo