Onetamil News Logo

கயத்தார் காவல் நிலையம் பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது   

Onetamil News
 

கயத்தார் காவல் நிலையம் பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது   


தூத்துக்குடி 2021 நவம்பர் 23 ;தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் காவல் நிலையம் பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமங்கலகுறிச்சி நடுத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் பூமாரியப்பன் (56) என்பவரும், இவருடைய மருமகன் சீனிபாண்டி மகன் சுடலைமணி (25) என்பவரும் சேர்ந்து தெற்கு கோனார் கோட்டை புதூர் பகுதியில் வாட்டர் சப்ளை கம்பெனி நடத்தி வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பூமாரியப்பனின் மருமகனான சுடலைமணி என்பவர் பிரிந்து சென்று தனியாக வாட்டர் சப்ளை கம்பெனி நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி சுடலைமணி மாமனார் பூமாரியப்பனிடமிருந்து பிரிந்து வரும் பொழுது கம்பெனியில் இருந்த வண்டியையும் மெஷினையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இதற்காக பூமாரியப்பன் தனது மருமகன் சுடலைமணியிடம் 4 லட்சம் பணம் கேட்டு வந்துள்ளார். பணத்தை தர மறுத்த சுடலைமணி பூமாரியப்பனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக  சுடலைமணி மற்றும் அவரது தந்தையான திருமங்கலகுறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சீனிபாண்டி (50) ஆகிய 2 பேரும் சேர்ந்து நேற்று (22.11.2021) இரவு தெற்கு கோனார் கோட்டை புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பூமாரியப்பனிடம் இது குறித்து தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பூமாரியப்பன் அளித்த புகாரின் பேரில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  சபாபதி வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரிகளில் சீனிபாண்டி என்பவரை கைது செய்தார். மேலும் சுடலைமணியை கயத்தார் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo