Onetamil News Logo

கேள் இன் இண்டியா விளையாட்டின்  போது  ஆம்புலன்ஸ் வசதி   இல்லாததால்  அரசு பள்ளி   மாணவி மரணம்  உறவினர்கள் முற்றுகை

 
Onetamil News
Onetamil News
 
 

கேள் இன் இண்டியா  விளையாட்டின்  போது  ஆம்புலன்ஸ் வசதி   இல்லாததால்  அரசு பள்ளி   மாணவி மரணம்  உறவினர்கள் முற்றுகை



  ஜனவரி  6 ;  
இந்திய அரசானது  விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் முதல் மாநகரம் வரை உள்ள மாணவ மாணவியர்கள் விளையாட்டில் பங்கேற்று தேசிய  அளவில் விளையாட நல்ல வாய்ப்பை உருவியது அதன் முதல் படி இன்றும்,நாளையும் 14  வயதுக்கு கீழ்,17  வயதுக்கு கீழ் ,என்று இரண்டு பிரிவுகளில் அனைத்து  விளையாட்டு போட்டிகளும் நடத்தி,      வரும் 11 ,12 , தேதிகளில் மாநில அளவில் விளையாட செல்லும் நேரத்தில் குத்து சண்டை வீராங்கணையான மாரீஸ்வரி தீடிரென மரணம் அடைந்தார்.  இவர்                                                                                                                                                               கோரம்பள்ளம், மாதவன் நகர் பகுதியில் உள்ள  கென்னடி மகள் மாரீஸ்வரி (14). இவர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள  சோரீஸ்புரம்   அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். குத்து சண்டை வீராங்கணையான மாரீஸ்வரி  இன்று தூத்துக்குடி தருவை  விளையாட்டரங்கில் அரசு சார்பில் நடைபெறும் குத்து சண்டை  45கிலோ எடை பிரிவில் பங்கேற்று விளையாடினார்.   23  நிமிடங்கள்  விளையாடிய பின்னர் அவர்  திடீரென மயங்கி விழுந்தவரை   விளையாட்டு வீரர்கள் தூக்கி சென்று ஹோலி கிராஸ்  எதிரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முடியாது என்றவுடன் அதன் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிக்சை பலனின்றி இறந்தார்.
 இதுகுறித்து தகவல் அறிந்து ஏஎஸ்பி செல்வ நாகரத்தினம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இப்போட்டிகள் அரசு சார்பில் நடைபெற்று வருவதால், சம்பவம் குறித்து தூத்துக்குடி சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த துயர சம்பவத்தால் விளையாட்டு வீரர்கள் கவலையடைந்தனர்.  இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்கும் சிறு குழந்தைகளுக்கு எந்த வித முதலுதவிக்கும் மருத்துவர்களோ,ஆம்புலன்ஸ் வசதிகளோ இல்லாததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo