Onetamil News Logo

கேரளவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழப்பு ;14 பேர் காணவில்லை ; கேரளாவிற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வந்த நிதி ரூ.1027 கோடியாக உயர்வு   

Onetamil News
 

கேரளவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழப்பு ;14 பேர் காணவில்லை ; கேரளாவிற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வந்த நிதி ரூ.1027 கோடியாக உயர்வு   


திருவனந்தபுரம்: 2018 ஆகஸ்ட் 31: கேரளவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழப்பு ;.  14 பேர் காணவில்லை ; கேரளாவிற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வந்த நிதி ரூ.1027 கோடியாக  உயர்ந்துள்ளது. KeralaFloods Kerala Relief Fund
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 28-ந் தேதி தொடங்கியதில் இருந்து மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 14 பேர் காணாமல்போய் உள்ளனர். இந்த பேரிடரால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது. ஆண்டு திட்ட மதிப்பீடான ரூ.37,247.99 கோடியைவிட இழப்பு மிக அதிகமாக உள்ளது.
இதற்காக மத்திய அரசு நிவாரண உதவியாக இதுவரை ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. பேரழிவின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப கூடுதல் நிதி உதவியை மத்திய அரசு அளிக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நேற்று முன்தினம் வரை ரூ.730 கோடி கிடைத்திருந்தது. இதுதவிர நிலமாகவும், நகைகளாகவும் நிவாரண நிதிக்கு கிடைத்தது.
இந்நிலையில் கேரள மழைவெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.145 கோடி வரையில் பல்வேறு வங்கிகளின் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo