Onetamil News Logo

தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னா சுரே‌‌ஷ் தலைமறைவு ; பாலியல் புகார் கொடுப்பதில் வல்லவர். 

Onetamil News
 

தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னா சுரே‌‌ஷ் தலைமறைவு ; பாலியல் புகார் கொடுப்பதில் வல்லவர். 


திருவனந்தபுரம்,2020 ஜூலை 10 ;திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது மணப்பாடில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்த சரித் குமார் என்பவருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருப்பதும், மேலும் அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு சரித் குமார் பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அதன்பிறகு, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை மறைத்து, தான் தொடர்ந்து பணிபுரிவதாக தெரிவித்ததாகவும், அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அடிக்கடி தூதரகத்துக்கு பார்சல்கள் வந்தன. அந்த பார்சல்கள் சோதனை செய்யப்படாததை, சரித் குமார், தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்கத்தை பல முறை கடத்தியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சரித் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர்.இந்த கடத்தலுக்கு தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் என்பவர் மூளையாக செயல்பட்டதும், இவர்கள் இருவரும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஸ்வப்னா சுரே‌‌ஷ் தற்போது தலைமறைவாகி விட்டார்.ஸ்வப்னா சுரேஷ் பாலியல் புகார் கொடுப்பதில் வல்லவர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான ஸ்வப்னா,தனது பள்ளிப் படிப்பை அபுதாபியில் முடித்துள்ளார். பின்னர், மகாராஷ்டிராவில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, 2011-ம்ஆண்டு அவர் கேரளா திரும்பினார்.இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிராவல் ஏஜென்ஸியில் ஸ்வப்னா பணியில் சேர்ந்தார். அங்கு தனது சக பணியாளர்கள் பலர் மீது ஏராளமான பாலியல் புகார்களை அவர் அளித்திருக்கிறார். இது அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் வேலையிழப்பதற்கு காரணமாக இருந்துள்ளார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஸ்வப்னா தன் மீது போலி பாலியல் புகாரை அளித்ததாக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஸ்வப்னா பலர் மீது பாலியல் புகார்களை அளித்தது தெரியவந்தது. இதன்பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு, ஏர்-இந்தியாவில் இருந்து ராஜினாமா செய்த ஸ்வப்னா, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முக்கியப் பதவியில் அமர்ந்தார். ஆனால், அங்கேயும் அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால் அந்தப் பணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலமாக கேரள அரசின் ஐ.டி. துறையில் ஆபரேஷனல் மேலாளராக அவர் பணியில் இணைந்துள்ளார். அவர் மீதான பழைய வழக்குகளை மறைத்து அவர் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஸ்வப்னா தற்போது இந்த தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கி உள்ளார்.                               
                         இந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடி வருகின்றனர். ஆனால், ஸ்வப்னா தலைமறைவாக இருந்து வருகிறார் இந்நிலையில் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் மேனன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் “ தங்கம் கடத்தல் வழக்கு இப்போதுதான் ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் பல சாட்சியங்களை அழிக்கலாம். ஆதலால், ஜாமீன் வழங்குவது சரியல்ல.


தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, தூதரகத்தின் ஆவணங்கள் மூலம் தங்கம் கடத்தல் செய்ய முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆதலால் ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுத்து விசாரித்து கடத்தலில் அவரின் பங்கு என்ன என்பதை விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

அப்போது ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்ஐஏ எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது என்பதை இதுவரை தெரியாததால், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் மனுதாரருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி அசோக் மேனன் விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

ஸ்வப்னா சுரேஷ் தூதரக ஆவணங்களைப் பயன்படுத்தி தங்கம் கடத்தலுக்கு முயன்றதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீவிரமாக இருப்பதால், அவருக்கு முன்ஜாமீன் கிடைப்பது சுலபமல்ல என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo