Onetamil News Logo

சபரிமலையில் பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை  ஒருவர் உயிரிழப்பு , 100க்கும் மேற்பட்டோர் காயம்  750க்கும் மேற்பட்டோர் கைது 

Onetamil News
 

சபரிமலையில் பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை  ஒருவர் உயிரிழப்பு , 100க்கும் மேற்பட்டோர் காயம்  750க்கும் மேற்பட்டோர் கைது 



கேரளா 2018 ஜனவரி 4 ;சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 750க்கும் மேற்பட்டோரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கேரளாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள், போலீஸ் உதவியுடன் கடந்த புதன்கிழமை அதிகாலையில் அய்யப்பனை தரிசனம் செய்தனர். இதை கண்டித்து, சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு சார்பில், கேரள மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தின்போது, சாலைகளில் ஊர்வலமாக வந்த பாஜகவினரை, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழிமறித்துத் தாக்கினர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது.
வன்முறையைத் தொடர்ந்து, மலப்புரம் தவலூரில், உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல், கொட்டாரக்கரையில், பாஜக - மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. நெடுமங்காடு காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதேபோல், பாலக்காட்டிலும் பதட்டமான சூழல் நிலவியது. மேலும், பாலக்காட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கும் தீவைக்கப்பட்டது. அவர்களை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.இந்நிலையில் பாலக்காட்டில், மாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக தொண்டர்கள் நேருக்கு நேர் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுப்படுத்தினர்.
வன்முறையில் ஈடுபட்டதாக, மாநிலம் முழுவதும், 750க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 21 காவலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 35 வீடுகள், அலுவலகங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் 100 அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை ஓரளவு சீராகி, பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
இதனிடையே கேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, ஆளுநர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo