Onetamil News Logo

நகைக்கு ஆசைப்பட்டு விஷப் பாம்பு விலைக்கு வாங்கி மனைவி கொலை ;கணவர் உட்பட பாம்பு பிடித்தவரும் கைது

Onetamil News
 

நகைக்கு ஆசைப்பட்டு விஷப் பாம்பு விலைக்கு வாங்கி மனைவி கொலை ;கணவர் உட்பட பாம்பு பிடித்தவரும் கைது 


கேரளா 2020 மே 25 ;நகைக்கு ஆசைப்பட்டு விஷப் பாம்பு விலைக்கு வாங்கி மனைவி கொலை ;கணவர் உட்பட பாம்பு பிடித்தவரும் கைது செய்யப்பட்டார். 
கேரளா பத்தனம்திட்டை மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் இவரது மனைவி உத்ரா இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து 5 வருடங்கள் விட்டது.மனைவியின் நகைக்கு ஆசைப்பட்டு அவரிடம் நகையை கேட்டுப்பார்த்துள்ளார். ஆனால் அவர் நகையை  வழங்கவில்லை.இந்த நிலையில் குடும்பத்தகராறு அடிக்கடி அவர்களுக்குள் நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் உத்ராவை திடீரென பாம்பு கடித்திருந்தது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார். இதையடுத்து, கடந்த மே 6 ஆம் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அங்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டிலேயே தங்கினார்.கொல்லம் அருகே அனச்சலைச் சேர்ந்த சூரஜின் மனைவி உத்ரா கடந்த மே 7-ம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையில் அவரது கணவர் சூரஜ் திட்டமிட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஏற்கெனவே பிப்ரவரியில் 5 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவி உத்ராவுக்கு தெரியாமலேயே அவரை கடிக்க விட்டுள்ளார். அப்போது உத்ராவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விஷப் பாம்பு வாங்கிய சூரஜ், மே 7ம் தேதி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை கடிக்க வைத்துள்ளார். மனைவிக்கு பாம்பு கடித்ததை காலை வரை யாரிடமும் சொல்லாமல் அவர் உயிரிழக்க காரணமாகியுள்ளார்.நகைக்கு ஆசைப்பட்டு விஷப் பாம்பு விலைக்கு வாங்கி மனைவி கொலைசெய்த வழக்கில் கணவர் உட்பட பாம்பு பிடித்தவரும் கைது  செய்யப்பட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo