Onetamil News Logo

இஸ்ரோ முன்னாள் தலைவர்  பாஜகவில் அமித்ஷா முன்னிலையில் இணைந்தார்.

Onetamil News
 

இஸ்ரோ முன்னாள் தலைவர்  பாஜகவில் அமித்ஷா முன்னிலையில் இணைந்தார்.



                                                                                                          
திருவனந்தபுரம், 2018 அக்டோபர் 28 ; இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் மண்டல பூஜை நடைபெறுகிறது. சிவகிரி மடத்தில் நடக்கும் நாராயணகுரு பூஜையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் வந்தார். அங்கிருந்து கார் மூலம்  சிவகிரி மடத்திற்கு சென்று அங்கு நடக்கும் பூஜைகளில் பங்கேற்றார்.
சிவகிரி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு திருவனந்தபுரம் சென்றார். அங்கு நடைபெற்ற பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தநிலையில், பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கட்சியில் நேற்று இணைந்தார். அவருடன் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஜி.ராமன் நாயர், பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவர் பிரமிளா தேவி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கர்ணாகுளம் மாவட்ட துணைத்தலைவர் திவாகரன் நாயர், மலங்காரா தேவாலயத்தின் தாமஸ் ஜான் ஆகியோரும் பாஜக,வில் இணைந்தனர்.
கடந்த 2003 முதல் 2009 வரை இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo