Onetamil News Logo

தூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி  முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே கீழ ஈரால் கிராமத்தினர்; அவர்களது பகுதியில் நாளை 7ம் தேதி  முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு 


தூத்துக்குடி 2020 ஜூலை 6 ;தமிழ்நாட்டிற்கு முன் உதாரணமாக திகழும் கீழ ஈரால் கிராமத்தினர்; கீழஈரால் பகுதியில் நாளை 7ம் தேதி  முதல் 12ம் தேதி ஞாயிறு வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த கிராம மக்களே முடிவு செய்தனர். 
தமிழ்நாட்டில் முதன்முதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகிலுள்ள,தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலயில் அமைந்துள்ள கீழஈரால் கிராமத்தில், ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பரவும் சூழல் ஏற்பட்டதால் ஊராட்சி நிர்வாகமும், வியாபாரிகள் சங்கமும் இணைந்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த முடிவு செய்தனர்.அதன்படி 7-7-2020 முதல் 12-7-2020 ஞாயிறு வரை முழு ஊரடங்கு அமுல்படுத்த உள்ளனர். ஊராட்சி தலைவர் பச்சைபாண்டி நாடார்,வியாபாரிகள் சங்கத் தலைவர்,கிராம ஆலோசனைக் குழு தலைவர் சீனிவாசன் மிட்டாய்கடை அதிபர் சீனிச்சாமி நாடார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வியாபாரப் பிரமுகர்கள், கலந்து கொண்டு முடிவெடுக்கப்பட்டது.
ஏற்கனவே கீழ ஈராலில் பொது ஊரடங்கு அமுலில் இருந்தபோது 1250 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி உட்பட நிவாரணம் செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்களிடம் வசூல் செய்து வழங்கினர்.தமிழ்நாட்டில், அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி ஒரு கிராமம் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி கொரானாவை ஒழிக்க அவர்களாகவே முழு ஊரடங்கு பிறப்பித்தது பெருமையாக உள்ளது. கேரளாவில் பல ஊராட்சி தலைவர்கள் இதுபோன்ற முடிவு எடுத்து செயல்படுத்தியதால் கொரானாவை கட்டுபடுத்த முடிந்தது. அரசை எதிர்பார்க்காமல் நாமாகவே முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடித்து கொரானாவை வெல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கு முன் உதாரணமாக திகழும் கீழ ஈரால் கிராமத்தினர் .
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo