Onetamil News Logo

இலங்கை குண்டு வெடிப்பில் சீனா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட பல  நாடுகளின் 27 வெளிநாட்டினர் பலி

Onetamil News
 

இலங்கை குண்டு வெடிப்பில் சீனா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட பல  நாடுகளின் 27 வெளிநாட்டினர் பலி



கொழும்பு 2019 ஏப்ரல் 22 ; ஈஸ்டர் திருநாளான நேற்று , இலங்கையில் என்று அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில், வெளிநாட்டவர்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
கொழும்பு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில், தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் தங்கியிருக்கக் கூடிய நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதில் 207 பேர் கொல்லப்பட்டனர். 450 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆகிய இரண்டு தரப்பையும் இலக்கு கொண்டு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர், என்பது தாக்குதல் நடைபெற்றுள்ள இடங்களை கணக்கில் வைத்து பார்க்கும் போது தெரிகிறது.ஒரே இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படையினர்தான், பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளனர் என்று, இலங்கையின் பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக புள்ளிவிவரப்படி, குறைந்தது 27 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்று போலீசாரும் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களில், 5 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய 22 பேரும், அவர்களின் தோல் நிறத்தை வைத்து வெளிநாட்டினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை பற்றிய மேலதிக தகவல்கள் இன்னும், வெளியாகவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo