Onetamil News Logo

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள் 

Onetamil News
 

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள் 


கொழும்பு 2019 செப் 12 ;கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.வசந்தராஜா தலைமையிலான எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் இப்பரப்புரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் குறித்த பகுதிகளில் உள்ள சமூக மட்ட அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் எழுக தமிழ் குறித்த கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், வாளைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி-வாகனேரி, கிராண், செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகரம், வவுணதீவு, ஆரையம்பதி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கல்முனை, காரைதீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo