Onetamil News Logo

நள்ளிரவில் வாகனசோதனையின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை, பெண் காவலர் ஒருவர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு

Onetamil News
 

நள்ளிரவில் வாகனசோதனையின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை, பெண் காவலர் ஒருவர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு


கோவில்பட்டி 2019 ஏப்ரல் 12 ;கோவில்பட்டியில் நள்ளிரவில் வாகனசோதனையின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதியை, பெண் காவலர் ஒருவர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சங்கரன்கோவில், கழுகுமலை வழியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.நாலாட்டின்புத்தூர் விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த பெண் காவலர், பாலபாரதியை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அங்கு திரண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சமதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம்குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து சிவகிரி மற்றும் சங்கரன் கோவிலில் நடந்த பிரசார கூட்டங்களில் பங்கேற்று விட்டு காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் 2 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் எனது காரை சோதனையிட்டனர்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் விலக்கு பகுதியில் நின்ற தேர்தல் பறக்கும் படையினர் எனது காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த ஒரு பெண் காவலர், எனது பையை நீ தான் திறக்க வேண்டும் என சோதனையிடும் அதைவிட உத்தர விடுவதிலேயே தான் குறியாக இருந்தார். தாங்கள் சொல்வதற்கு பணிந்து செல்ல வேண்டும் என்பது போல் நடந்து கொண்டார். அராஜகமாக மிரட்டி அவரை அவமானப்படுத்தும் நோக்கில் மிக மோசமாக இழிவான சொற்களை அந்தப் பெண் காவலர் பயன்படுத்தினார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் என்னை சமாதானப்படுத்தினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காவல்துறை என்பது பழைய வன்முறை குணத்தோடு தான் உள்ளனர் என்று தெரிகிறது.
நான் 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். எனது வயது, மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆகியவற்றைக் கடந்து நள்ளிரவில் காவல்துறை இப்படி நடந்து கொள்கிறது என்றால் இந்தத் தேர்தல் ஒரு அமைதியான ஜனநாயக முறையில் நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தூத்துக்குடி காவல்துறையில் மாறுதல் கொண்டு வர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் காவல்துறை பொதுமக்களையும், அரசியல்வாதிகளையும் ஒரு குற்றவாளியைப் போல பணம் எடுத்து செல்வது போல அவர்களது பார்வையும் நடத்தையும் உள்ளது. உத்தரவிடுவது, பைகளை கடுமையாக பறித்து சோதனையிடுவது என அராஜகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறைக்கு எப்படி சோதனையிட வேண்டும் என்ற பயிற்சியும் இல்லை. எந்த நாகரீகம் வார்த்தைகளும் கிடையாது.காரில் செல்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்பதுபோல காவல்துறையின் பார்வை இருக்கிறது. பல மாவட்டங்களை கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள அரசியல் இயக்கம் மக்களின் போக்குவரத்து ஆகியவற்றைப் பார்த்து அனுமதிக்கின்றனர். ஆனால் தூத்துக்குடிக்குள் நுழையும் இந்த நேரத்தில் மிகவும் கசப்பான வெறுப்பான சம்பவத்தை காவல்துறை திட்டமிட்டு நடத்தி உள்ளது. இது ஜனநாயகத்துக்கு அபாயகரமானது. தமிழக தலைமை தேர்தல் ஆணையமும், மாவட்ட தேர்தல் ஆணையமும் உரிய உரிய முறையில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo