Onetamil News Logo

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், சாலை விரிவாக்கம் ஆகியவற்றை குறித்து ஆய்வு கூட்டம் 

Onetamil News
 

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், சாலை விரிவாக்கம் ஆகியவற்றை குறித்து ஆய்வு கூட்டம் 


கோவில்பட்டி,2020 வியாழக்கிழமை மே 4  ; தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், சாலை விரிவாக்கம் ஆகியவற்றை குறித்து ஆய்வு கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், சாலை விரிவாக்கம் ஆகியவற்றை குறித்து ஆய்வு கூட்டம்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் இன்று (04.06.2020) நடைபெற்றது. கூட்டத்தில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  சுய ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  முன்னிலை வகித்தார்.
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: 
கோவைட் 19 கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கிய பிறகு உலக நாடுகள் முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. நமது நாட்டிலும் சுய ஊரடங்கு உத்தரவு பாரத பிரதமர் அறிவித்தார்கள். மார்ச் 22ம் தேதி முதல் சுய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் சுய ஊரடங்க உத்தரவு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசிலனை செய்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து அவர்களது பாதுகாத்து வருகிறார்கள். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தினசரி தலைமை செயலகத்தில் கொரோனா தொற்று ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து, மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரங்காட்டிட உத்தரவிட்டுள்ளார்கள். மேலும்  தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்கள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முககவங்களை அணிய வேண்டும் எனவும், தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் கபசுர குடிநீர், சத்தான மாத்திரைகள் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் உட்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள். 
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக 27 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 26 நபர்கள் பூரண குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார். வெளி மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களுக்கு அதிக அளவு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவர்களை கண்காணிக்க மாவட்ட முழுவதும் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 02.06.2020 அன்று இலங்கை கொழும்பில்  இருந்து சுமார் 700 பயணிகள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்கள். அவர்கள் அனைவரும் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற 7ம் தேதி மாலத்தீவில் இருந்தும், 17ம் தேதி ஈரானில் இருந்தும் கப்பலும் வருகிறது. அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  மகாராஷ்டிரா  மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தந்த 170 நபர்களுக்கும், குஜராத் மாநிலத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தந்த 6 நபர்கள் மற்றும் பிற மாநிலங்களான ஆந்திரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தில் இருந்து வருகை தரும் நபர்கள் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் சோதனை சாவடியில் அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தேவையான உணவு வசதிகள், தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14 கோடி முககவசங்களை அரசே கொள்முதல் செய்து அனைத்து நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 அல்லது 3 முககவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000/- மற்றும் 3 மாதத்திற்கு விலையில்லா ரேசன் பொருட்களை வழங்கப்படும் என்று அறிவித்தன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க திருமண மண்படங்கள், வணிக வளாகங்கள் திறப்பதற்கும், பொதுமக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும்; தடை விதித்துள்ளார்கள். பின்னர் பல்வேறு தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து கொண்டு வருகிறார்கள். 
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிட தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர்  தூத்துக்குடி  மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் கொரோனா தொற்று ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடிய பிறகு சேம்பர் ஆப் காமஸ் மற்றும் துடிசியா போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கத்தின் சார்பில் தொழில் பாதித்ததாக தெரிவித்துகொண்டு இருந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர்  தூத்துக்குடி வருகை தந்தபோது அவர்களை நேரடியாக சந்தித்து தொழில் பாதிக்கப்பட்டதற்காக மனுக்கள் வழங்கினார்கள். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்   பரிசிலனை செய்து தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.50,000 கோடி செலவில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையும் அமைக்கப்படும் என மகத்தான அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2014ம் ஆண்டு 110 விதியின் கீழ் உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடன்குடி அனல்மின் நிலையம் திட்ட பணிகளை அடிக்கல் நாட்டினார். அதேபோல் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு 601 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விமான நிலைய அலுவலர்களிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டது. இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்ப சுவாமிகள் அவர்களுக்கு ரூ.20 லட்சம் செலவில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்படம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அவர் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடவும், உமறுப்புலவர் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடவும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்திய அளவில் காவல் துறை செயல்பாடுகளை பாராட்டி கோவை மாவட்டத்திற்கும், சென்னை மாவட்டத்திற்கும் விருதுகள் கிடைக்கபெற்றுள்ளது. மேலும் மக்கள் நல்வாழ்வு துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளுக்கு 7 ஆண்டுகளாக விருதுகள் கிடைத்து வருகிறது. தமிழகத்தில் ஊரக வளர்ச்சி முகமை 99 விருதுகளை பெற்றுள்ளது. மீனவ மக்களின் தந்தை என்று அழைக்கப்படும் குருஸ் பர்னான்டஸ் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கையாக முன் வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு மத்திய அரசின் விருது பெறும் வகையில் பல்வேறு சரக்கு பெட்டகம் இறக்கு தளம் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 131 கிராமங்கள், 3 பேரூராட்சிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, உட்கட்டமைப்பு வசதிகள், பகுதி நேர அல்லது முழு நேர நியாய விலை கடைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. 45 ஆண்டு காலமாக நீண்ட நாள் கோரிக்கையாக 2வது பைப் லைன் திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோவில்பட்டி மக்களின் கோரிக்கையாக இருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இக்கோரிக்கையினை எடுத்து சென்று கோவில்பட்டி மக்களின் கனவை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தியதால் சுமார் 1 ½ லட்சம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர்; என தெரிவித்தார். 
கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சந்திரசேகர், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜராம், கோவில்பட்டி நகராட்சி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா, தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் சௌந்தர் பாண்டி, விஷ்வலிங்கம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo