Onetamil News Logo

கோவில்பட்டி ஜீ.வி.என் கல்லூரியில் சமத்துவபொங்கல்விழா

Onetamil News
 

கோவில்பட்டி ஜீ.வி.என் கல்லூரியில் சமத்துவபொங்கல்விழா



கோவில்பட்டி 2019 ஜனவரி 13 ;
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. கல்லூரி செயலாளர் செல்வராஜ் பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் ஆட்டம், பாட்டம் கொண்டாடத்துடன், கும்மியடித்து சமத்துவப் பொங்கலை கொண்டாடடினர். தொடர்ந்து கைப்பந்து, எறிபந்து, மற்றும் உறிஅடித்தல் போட்டிகளும் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி சமத்துவ பொங்கல் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இதன் பின்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், தப்பாட்டம் நடைபெற்றது. விழாவில் சமத்துவ பொங்கல் விழாவின் பொறுப்பாளர் பேராசிரியர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் ராமமூர்த்தி, மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo