Onetamil News Logo

பள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

Onetamil News
 

பள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி


கோவில்பட்டி,2020 பிப்ரவரி 27 ;கோவில்பட்டி நகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி நடந்தது.
கோவில்பட்டி நகராட்சியின் சார்பாக நகர்பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் தினசரி வீடு வீடாக சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், வீட்டு சமையலறை கழிவுகள் ஆகியவற்றை அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள நுண்உரமாக்கும் செயலாக்க மையத்தில் உரமாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேற்படி உரமாக்கும் பணிகளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் பார்வையிட்டார்கள். நகராட்சி சுகாதார ஆய்வாளர் .வள்ளிராஜ் வரவேற்றார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் தினசரி வீடுகளில் சேகரமாகும் காய்கறி கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்படும் முறைகள் பற்றியும், நகர்பகுதிகளில் 5 இடங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நுண் உரமாக்கும் செயலாக்க மையத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உரமாக்கும் செயல்முறை குறித்தும், மக்கும் கழிவுகளான காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், வீட்டு சமையலறை கழிவுகள் ஆகியவற்றை பிரித்து வழங்குவதன் அவசியத்தை குறித்தும் விரிவாக மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்கள். மேலும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 200 மாணவிகள் நகராட்சி நுண் உரமாக்க செயலாக்க மையத்தை பார்வையிட்டார்கள். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo