Onetamil News Logo

கோவில்பட்டி வட்டம் கயத்தாரில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் .கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்.

Onetamil News
 

கோவில்பட்டி வட்டம் கயத்தாரில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் .கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்.


 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கயத்தார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் எம்.ரவி குமார்  தலைமையில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்; கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் 1397 பயனாளிகளுக்கு வழங்கினார்; 
இவ்விழாவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை   செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்; கடம்பூர்.செ.ராஜூ  வழங்கி  பேசியதாவது.,
 உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள். தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு செய்யும் தொண்டு தெய்வத்திற்கு செய்யும் தொண்டு என்பார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்வாதாரத்தை உணர்த்தும் திட்டமாக இருக்கும். மாண்புமிகு அம்மா அவர்கள் தான் செயல்படுத்திய ஒவ்வொரு திட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இயற்கை காரணமாக தற்பொழுது தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டிருந்தாலும் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மேலும், வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான். மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி வர்தா புயலின் பாதிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்ற நேரங்களில் அரசு விரைந்து செயல்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவில் திரும்பச் செய்தது, அதேபோல் வறட்சியின் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கின்ற வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
கலெக்டர்  எம்.ரவி குமார், பேசும் போது தெரிவித்தாவது:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாமகளில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வழங்கப்படுகின்றன. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே நியாய விலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 958 நியாயவிலைக்கடைகளில் 424878 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு  மொத்தம் ரூ.1,91,19,510ஃ- மதிப்பிலான  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ்,தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கயத்தார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சுடலை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், கோவில்பட்டி வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo