Onetamil News Logo

செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல்

Onetamil News
 

செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல்


தூத்துக்குடி 2019 ஜனவரி 13 ;கோவில்பட்டியில் செல் போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி பைபாஸ் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமசெந்தூரப்பன் மகன் காளிராஜ்(62). இவர் இம்மாதம் 9ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கும்போது வழக்கம்போல ஜன்னல் ஓரத்தில் தனது செல்போனை வைத்துவிட்டு தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது செல்போனை காணவில்லை.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, செல்போன் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேரமாவில் பதிவான காட்சிகளை எடுத்து ஆய்வு செய்தபோது கிடைத்த தகவலையடுத்து, செல்போன் திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீஸார் இனாம்மணியாச்சி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்துசென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது அவர் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
அதையடுத்து விசாரணையில் அவர், ராஜபாளையம் ராம் நகர் நடுத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகன் பிரபு(34) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த காளிராஜுக்குச் சொந்தமான செல்போனை பறிமுதல் செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo