Onetamil News Logo

மஞ்சள் பை, பாத்திரங்கள் கொண்டு வந்தால் சிறப்பு சலுகை   தனியார் ஹோட்டல் அறிவிப்பு 

Onetamil News
 

மஞ்சள் பை, பாத்திரங்கள் கொண்டு வந்தால் சிறப்பு சலுகை   தனியார் ஹோட்டல் அறிவிப்பு 


                                                                                                     
கோவில்பட்டி 2018 ஜனவரி 6 ;மஞ்சள் பை, பாத்திரங்கள் கொண்டு வந்தால் சிறப்பு சலுகையை தனியார் ஹோட்டல் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் என பல தரப்பினரும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்கும் வகையிலும், பொது மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை தந்து, அசத்தி வருகிறது. கோவில்பட்டி மெயின் சாலையில் செயல்பட்டு வரும் ஆர்த்தி ஹோட்டலில், தனது வாடிக்கையாளர்கள் மஞ்சள் பை, பாத்திரங்கள் கொண்டு உணவு பொருள்களை வாங்கி சென்றால் அவர்களுக்கு வாங்கும் பொருள்களின் விலைகளில் 2 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்கள் மற்றும் தனது வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாகவும், பிளாஸ்டிக்கினால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவது மட்டுமின்றி, பல்வேறு சுகாதார சீர்கோடுகள் ஏற்படும் என்பது மக்கள் உணர்ந்து அவர்களும் பிளாஸ்டிக்கை தவிர்க்க தொடங்கியுள்ளதாகவும், மேலும் வாடிக்கையாளர்களிடம் டெபாசீட் வாங்கி கொண்டு பாத்திரங்கள் வழங்குதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo