Onetamil News Logo

தமிழகத்தில் 100 சதவிகிதம் போராட்டமே கூடாது என ரஜினி கூறவில்லை என்பதே எனது கருத்து. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியமானதுதான் இதை யாரும் மறுக்கவில்லை.  ;கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் பேச்சு 

Onetamil News
 

தமிழகத்தில் 100 சதவிகிதம் போராட்டமே கூடாது என ரஜினி கூறவில்லை என்பதே எனது கருத்து;மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியமானதுதான் இதை யாரும் மறுக்கவில்லை.  ;கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் பேச்சு 


ஸ்ரீவைகுண்டம் 2018 ஜூன் 04 ;தமிழகத்தில் 100 சதவிகிதம் போராட்டமே கூடாது என ரஜினி கூறவில்லை என்பதே எனது கருத்து. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியமானதுதான் இதை யாரும் மறுக்கவில்லை.என்று கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் பேசினார். 
கோவில்பட்டி அருகே வெம்பூரில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடியில் மக்களின் முற்றுகைப் போராட்டத்தின் போது விலைமதிப்பில்லாத 13 பேர் உயிரை காக்கை குருவிகளைப் போல சுட்டு வீழ்த்தியுள்ளது காவல்துறை. அரசின் சரியான திட்டமிடல் இல்லாததும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும்தான் இதற்கு காரணம். தமிழகத்தில் 100 சதவிகிதம் போராட்டமே கூடாது என ரஜினி கூறவில்லை என்பதே எனது கருத்து. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராட வேண்டியது அவசியமானதுதான் இதை யாரும் மறுக்கவில்லை. மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டம்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் அளவிற்கு கொண்டு சென்றது. நியாயத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்திய மக்களை குற்றவாளிகள், சமூக விரோதிகள் என அரசே கூறுவதை அனுமதிக்க முடியாது. துப்பாக்கி சூட்டிற்கு இந்தியாவில் உள்ள எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் பிரதமர் மோடி எவ்வித கருத்தும் தெரிவிக்கமால் இருப்பது மாற்றன் தாய் மனப்பான்மையை காட்டுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படாத நிலையே உள்ளது. அரசு மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஊட்ட நினைத்தால் அமைச்சரவையைக் கூட்டி ஆலையை நிரந்தரமாக மூடிட தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும். பெட்ரோல்,டீசல் விலையை மத்தியரசு ஜீ.எஸ்.டிக்குள்ள கொண்டு வரவேண்டும், தமிழகரசு கலால் வரியை குறைக்க வேண்டும், கேரளாவில் அந்த மாநில அரசு குறைத்துள்ளது அதே போன்று தமிழகரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்மத்திய அரசால் மாநில அரசிற்கு பல தேவைகள் நிறைவேற உள்ளது. மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு தேவையானவற்றை வாதாடிப் பெறுவதை விட, அவர்கள் தருவதைப் பெறும் அரசாகவே தற்போதைய அரசு உள்ளது. இதில், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கத் தவறுகிற அரசாக உள்ளதால், மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது என்றார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo