Onetamil News Logo

மாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது 

Onetamil News
 

மாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது 


கோவில்பட்டி  2019 செப் 17 ; நாலாட்டின்புத்தூர் -யில் மாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது  கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் காவல் நிலையம் ,கடலையூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் பாலசுப்ரமணியன்(49). இவரது மாமியார் அதே பகுதியை சேர்ந்த அமிர்தம்(70)., பாலசுப்பிரமணியனின் மகள் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அமிர்தம், பாலசுப்ரமணியனின் மகளுக்கு சாப்பாடு கொடுத்து விடாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் மனைவி, சுப்புலட்சுமியை அமிர்தம் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த  பாலசுப்பிரமணியன் 16.09.2019 அன்று தகராறில் ஈடுபட்டு அமிர்தத்தை உலக்கையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அமிர்தம் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகதேவி  வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo