Onetamil News Logo

கொரோனா தடுப்பு பணியில் அரசு அலட்சியம் காட்டியதா என்பது மக்களுக்கு தெரியும்.கொரோனாவிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்பதும் மக்களுக்கு தெரியும் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

Onetamil News
 

கொரோனா தடுப்பு பணியில் அரசு அலட்சியம் காட்டியதா என்பது மக்களுக்கு தெரியும்.கொரோனாவிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்பதும் மக்களுக்கு தெரியும் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜு



தூத்துக்குடி 2020 மே 31 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தெக்ஷணமாற நாடார் சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு என்று குடும்பம் அமைத்துக் கொள்ளமால் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் வரிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொள்ளாமல் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர் .இது மக்களுக்கும் தெரியும் என்றும், பல நேரங்களில் எனக்கு குடும்பம் கிடையாது.தமிழ்நாடு தான் எனது இல்லம், தமிழ்நாட்டு மக்கள் தான் என் மக்கள் என்று சொல்லி உள்ளார் ஜெயலலிதா, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அனைத்து மக்களும் சென்ற காண முடியும் என்பதற்கதான் அரசு நடவடிக்கை மேற்க்கொண்டது என்றும், பொதுமக்கள் வேண்டுகோள் படி தான் நினைவு இல்லமாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டார்.மக்கள் மனதில் நின்ற தலைவர்கள் காமராஜர், அண்ணா, ஆகியோர் வாழ்ந்த இல்லம், எம்.ஜீ.ஆர் அலுவலகம் ஆகியவற்றை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி உள்ளது என்றும், ஜெ.தீபா, தீபக் ஆகியோரை நீதிமன்றம் வாரிசாக தான் அறிவித்துள்ளது என்றும், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் கூறவில்லை,வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு அடைந்த பின் முதல்வர் தீர்க்கமான முடிவு எடுப்பார் என்றும்,கொரோனா தடுப்பு பணியில் அரசு அலட்சியம் காட்டியதா என்பது மக்களுக்கு தெரியும்.கொரோனாவிலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்பதும் மக்களுக்கு தெரியும், கொரோனா தொடங்கியதில் இருந்து உருப்படியாக ஏதாவது ஒரு காரியத்தை அரசுக்கு ஆலோசனையாக எதிர்கட்சி செய்ய வேண்டிய கடமையை செய்யவில்லை,குற்றம் கண்டுபிடிப்பது குறை கண்டுபிடிப்பதே எதிர்க் கட்சித் தலைவருக்கு இலக்கணமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.இதையும் தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். 24மணிநேரமும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் சதவீதம் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகம்.தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே பாராட்டியுள்ளார்.அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பது மத்திய அரசுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும்.கொரோனாவில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தமிழகத்தில்தான் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம் என்றார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo