Onetamil News Logo

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியத்தை வழங்காத பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Onetamil News
 

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியத்தை வழங்காத பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி 2018 டிசம்பர் 7 ;பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு 2018ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியத்தை வழங்காத பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைக் கண்டித்தும், 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். சேமநல நிதி, தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் மகேந்திரமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒப்பந்த ஊழியர் சங்கச் செயலாளர் பாலசிங் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், பரமசிவன், ஒப்பந்த ஊழியர் சங்கப் பொருளாளர் தங்கமாரியப்பன், துணைச் செயலர் மாணிக்கராஜ், துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர்கள் ரஜினிகுமார், முருகன், பேராச்சி செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo