Onetamil News Logo

பார்த்தீனிய செடிகளை அழிக்க வலியுறுத்தி விவசாயிகள் முகத்தில் மாஸ்க் அணிந்து வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுக்கை

Onetamil News
 

பார்த்தீனிய செடிகளை அழிக்க வலியுறுத்தி விவசாயிகள் முகத்தில் மாஸ்க் அணிந்து வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுக்கை


கோவில்பட்டி 2019 டிசம்பர் 2 ;பார்த்தீனிய செடிகளை அழிக்க வலியுறுத்தி விவசாயிகள் முகத்தில் மாஸ்க் அணிந்து வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுக்கையிட்டனர்.
தேசிய விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ரெங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பி.பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை பார்த்தீனிய செடிகளுடன் வந்து முற்றுகையிட்டு, கோஷங்கள் முழங்கினர். பின்னர் அவர்கள் வேளாண் விரிவாக்க மைய கண்காணிப்பாளர் ராஜூவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை சுற்றி ஏராளமான அளவில் பார்த்தீனிய செடிகள் முளைத்து தற்போது பூக்கும் பருவத்தில் உள்ளது. இதன் மகரந்த தூளானது நுரையீரல் சம்பந்தமான நோயை உண்டாக்கும் தன்மை கொண்டது. இந்த செடிகளை அழிப்பதற்கான விழிப்புணர்வு இதுவரை அரசு சார்பில் ஏற்படுத்தப்படவில்லை. இந்த செடிகள் மானாவாரி நிலங்களில் அதிகளவு வளர்ந்து விவசாயத்தையும் பாதித்து வருகிறது. எனவே, பார்த்தீனிய செடிகளை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அரசின் கவனக்குறைவால் வந்த இந்த விதையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலங்களிலிருந்து பார்த்தீனிய செடிகளை அழிக்க ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo