Onetamil News Logo

கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.168.70 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் வடிகால் அமைக்கும் பணி

Onetamil News
 

கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.168.70 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் வடிகால் அமைக்கும் பணி


கழுகுமலை  2020 ஜன.25:தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.168.70 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் 
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ரூ.168.70 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று (25.01.2020) நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு சாலை மேம்பாடு மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.  கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சியில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் வார்டு எண்.2 குமாரபுரம் சாலையினை மேம்படுத்துதல், ரூ.48.70 லட்சம் மதிப்பில் வார்டு எண்.13 நடுத்தெருவில் தார்சாலை, பேவர் பிளாக், வடிகால் அமைத்தல் மற்றும் நபார்டு நிதி உதவி திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் வார்டு எண்.5 குமரேசன் நகர் தார்சாலையினை மேம்படுத்துதல் மற்றும் வடிகால் அமைத்தல் என மொத்தம் ரூ.168.70 லட்சம் மதிப்பிலான 3 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. மேலும், கழுகுமலை தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு பணிகள் செய்யப்பட உள்ளது.  மேலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார். 
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திரு.குற்றாலிங்கம், கோவில்பட்டி வட்டாட்சியர் திருமணிகண்டன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் முகமதுசெரிப், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கழுகுமலை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையாபாண்டி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் திரு.கருப்புசாமி, கழுகுமலை பேரூராட்சி செயல் அலவலர் உஷா, முக்கிய பிரமுகர்கள் முத்துராஜா, மாரியப்பன்;, காமராஜ் மற்றும் அலுவலர்கள்; கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo