Onetamil News Logo

பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் - சுற்றி வளைத்து பிடித்த பொது மக்கள்

Onetamil News
 

பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் - சுற்றி வளைத்து பிடித்த பொது மக்கள்


கோவில்பட்டி 2019 ஜனவரி 13 ; கோவில்பட்டி தெட்சிணாமூர்த்திபிள்ளையார்  கோவில் தேரு அருகே மெயின் சாலையில் பெயிண்ட் கடை  வைத்து நடத்தி வருபவர் சின்னசாமி. நேற்று இவரது கடைக்கு 2 வாலிபர்கள் தங்களுக்கு 3 வீடுகள் இருப்பதாக, அதற்கு பெயிண்ட அடிக்க வேண்டும் என்றும், நல்ல பெயிண்டர் இருந்தால் தெரிவிக்கும் படியும், பெயிண்ட்ங்களும் வேண்டும் என்று கூறியுள்ளனர். சின்னசாமி நாளை வாரூங்கள், பெயிண்ட்ரை வரச்சொல்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் அந்த வாலிபர்கள் இருவரும் பெயிண்ட் கடைக்கு வந்துள்ளார். அப்போது சின்னசாமி மனைவி பகவதி என்பவர் மட்டும் கடையில் இருந்துள்ளார். அவரிடம் இருவரும் பெயிண்ட் வகைகள் பற்றியும், பெயிண்டர் பற்றி கேட்டு விட்டு சென்றுள்ளனர். இருவரும் சென்ற சிறிது நேரத்தில் தனது செல்போன் காணமால் போனது கண்டு அதிர்ச்சியடைந்த பகவதி, கடையில் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, 2நாள்களாக கடைக்கு வந்த வாலிபர்கள் செல்போனை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பகவதி தனது கணவர் சின்னசாமி மற்றும் அவரது மகன் போத்திராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் சென்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசாரிடம் தந்தையும், மகனும் சென்ற போது, தீயணைப்பு நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செல்போன் திருடி சென்ற வாலிபரில் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்துள்ளனர். அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து, மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பிடிப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் கார்த்திக் என்பதும், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தினை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. கார்த்திக் ஒரு தனியார் வீட்டு உபயோக பொருள்கள் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் கார்த்திக்வுடன் வந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட மற்றொரு வாலிபர் கணேஷ்பிரபு என்பது, இவர் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதில் 2 நாள்களாக அறை எடுத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கணேஷ்பிரபுவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo