Onetamil News Logo

கோவில்பட்டி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து தங்கநகை மற்றும் 1 இலட்சத்து 28 ஆயிரம் ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர் ;போலீஸ் வலை வீச்சு 

Onetamil News
 

கோவில்பட்டி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து தங்கநகை மற்றும் 1 இலட்சத்து 28 ஆயிரம் ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர் ;போலீஸ் வலை வீச்சு 


கோவில்பட்டி 2018 ஆகஸ்ட் 2 ; கோவில்பட்டி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் தங்கநகை மற்றும் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குருமலையையடுத்த கீழப்புதூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன். இவர் மற்றும் இவரது மனைவி கௌரி இருவரும் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்குச் சென்று வேலையை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினர். 
                                                                                                                                                 அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட இருவரும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த சுமார் 1 பவுன் எடையுள்ள இரு ஜோடி கல் வைத்த கம்மல்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1லட்சத்து28ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. 
இதுகுறித்து கௌரி அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து வீட்டின் கதவை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo