Onetamil News Logo

குடிசை மற்றுவாரியத்தின் முலம் ரூ.18.25 கோடி மதிப்பில் புதிய வீடு கட்டும் பணிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுமான பணிகள் ஆய்வு   

Onetamil News
 

குடிசை மற்றுவாரியத்தின் முலம் ரூ.18.25 கோடி மதிப்பில் புதிய வீடு கட்டும் பணிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுமான பணிகள் ஆய்வு   


கோவில்பட்டி 2018 ஜனவரி 10 ;கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் குடிசை மற்றுவாரியத்தின் முலம் ரூ.18.25 கோடி மதிப்பில் புதிய வீடு கட்டும் பணிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுமான பணிகளை  செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மற்று வாரியத்தின் மூலம் அனைவரும் வீடுகள் திட்டத்தின்கிழ் திட்டம் 1ல் 92 வீடுகள் ரூ.8.00 கோடி மதிப்பிலும், திட்டம் 2 ன் கிழ் 120 வீடுகள் ரூ.10.25 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமான பணிகளை  செய்தி; மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என குடிசை மாற்று வாரிய அலுவலர் மற்றும் ஒப்பந்த தாரர்களிடம் உத்தரவிட்டார்.
                                                                                                                                        தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி பகுதியில் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு ரூ.5 கோடி மதிப்பிட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளை  செய்தி விளம்பரத்துறை அமைச்சர்  ஆய்வு செய்தார்.இறுதிக்கட்ட பனிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர்  விஜயா, கோவில்பட்டி நகர ஆணையாளர் அட்சையா, குடிசை மாற்று வாரிய செயற்பொறியார் செயசெல்வன், கோவில்பட்டி வட்டாட்சியர் பரமசிவன், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யத்துரைபாண்டியன், ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo