Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முககவசங்கள் வழங்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முககவசங்கள் வழங்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி 2020 ஆக 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முககவசங்கள் வழங்கும் பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செ.ராஜூ  துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் வ.உ.சி.நகர் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முககவசங்கள் வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்களை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முககவசங்கள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.07.2020 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 2 விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முககவசங்கள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி உறுப்பினர்கள் பயன்பெற உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  957  நியாய விலைக்கடைகள் மூலம் 4,97,120 குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள 16,71,909 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 33,43,818 தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 219 நியாய விலைக்கடைகள் மூலம் 1,80,484 குடும்ப அட்டைகளில் உள்ள 6,18,444 நபர்களுக்கு, 12,36,888 விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கும் முககவசங்கள் வழங்கப்பட உள்ளது. 
கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமியால் சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழும் நிலை உள்ளது.  மார்ச் 23 முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  ஒரு உயிரை கூட இழக்க அரசு தயாராக இல்லை என தெரிவித்து வருகிறார்கள். தலைமை செயலகத்தில் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தினசரி ஆய்வு கூட்டங்களை நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் திணறி வரும் நிலையில் தமிழகத்தில் சிறப்பாக நடவடிக்கைகளால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்திட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  எனினும் மக்கள் வீடுகளில் இருந்து வெளிவரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.  முககவசத்தான் உயிர் காக்கும் கேடயம் ஆகும். இதனால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.  குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் துவைத்து திரும்ப பயன்படுத்தும் வகையிலான முககவசங்கள் வழங்கப்படுகிறது. 

 தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின்  தீவிர நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் உள்ளது. மேலும் தமிழகத்திலேயே இறப்பு சதவீதம் குறைவாக உள்ள மாவட்டம் தூத்துக்குடி ஆகும். இங்கு இறப்பு சதவீதம் 0.63 சதவீதம் ஆகும். தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆய்வகத்தினையும், 3 ஆர்டிபிசிஆர் கருவிகளை வழங்கியுள்ளார்கள்.  இதன் மூலம் விரைவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதுவரை 70 சதவீதத்திற்கும் மேலான நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து நலம்பெற்று வீடு திரும்பி உள்ளனர். வயதானவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வந்தால் மிகவும் சிரமப்படுவீர்கள். எனவே முககவசம் அணிவது நம்மை காத்துக்கொள்ள உயிர் கவசம் என்பதை மனதில் வைத்து கண்டிப்பாக முறையாக அணிய வேண்டும் என தெரிவித்தார். 
நிகழ்ச்சியில்  கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கூட்டுறவு இணை பதிவாளர் ரமணிதேவி, துணை பதிவாளர்கள் ஜெயசீலன், மாரியப்பன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், கோவில்பட்டி மொத்த பண்டக விற்பனை சாலை மேலாண்மை இயக்குநர் கோகிலா, முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், வண்டானம் கருப்பசாமி, அய்யாத்துரை, சாமிராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo