Onetamil News Logo

பலத்த காற்றுடன் பரவலான மழை – 50 ஆண்டு கால பழமையான வாகை மரம் சாய்ந்து விழுந்தது ;மின்கம்பங்கள் சேதம்

Onetamil News
 

பலத்த காற்றுடன் பரவலான மழை – 50 ஆண்டு கால பழமையான வாகை மரம் சாய்ந்து விழுந்தது ;மின்கம்பங்கள் சேதம்


கோவில்பட்டி2019 மே 16: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வழக்கம் போல வெயில் அதிகமாக காணப்பட்டது. மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென பலத்த இடியுடன் சூறைக்காற்று வீசியது. இதில் கோவில்பட்டி, துறையூர், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.சூறைக்காற்றில் காமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த 50 ஆண்டு கால பழமையான வாகை மரம் சாய்ந்து விழுந்தது. மேலும் 10-க்கு மேற்பட்ட மின் கம்பங்கள் வயருடன் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தன. இதனால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து காமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இணைந்து வாகை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திர உதவியுடன் மரம் அகற்றப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காமநாயக்கன்பட்டி யில் இரவு வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை குறித்து மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்தனர். காட்டுப் பகுதியில் மின்கம்பங்கள் விழுந்து உள்ளனவா என ஊழியர்கள் பார்வையிட்டனர். அதேபோல் மின் இணைப்பு கொடுக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo