Onetamil News Logo

வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்ததை கண்டித்த அதிமுக முகவரை அமமுகவினர் 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை

Onetamil News
 

வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்ததை கண்டித்த அதிமுக முகவரை அமமுகவினர் 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை



கோவில்பட்டி 2019 ஏப்ரல் 18 ;கோவில்பட்டி அருகே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்கு சேகரித்ததை கண்டித்த அதிமுக முகவர் மீது தாக்குதல் நடத்தினர்.
கோவில்பட்டி அருகே கட்டாரங்குளத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் செந்தில்குமார்(38). இவர் கட்டாரங்குளத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக முகவராக பணியாற்றினார். அப்போது அமமுக கட்சியை சேர்ந்த பூலித்துரை, குட்டி சிங்கம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாக்குச்சாவடிக்குள் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு கேட்டுள்ளனர். இதனை செந்தில்குமார் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்த செந்தில்குமாரை தாக்கினர். காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் அரைமணி வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo