Onetamil News Logo

கயத்தார் பேரூராட்சி அசனார்நகர் பகுதியில் பொது நிதி ரூ.28.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட உள்ளுர் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். 

Onetamil News
 

கயத்தார் பேரூராட்சி அசனார்நகர் பகுதியில் பொது நிதி ரூ.28.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட உள்ளுர் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.   


தூத்துக்குடி  2020 ஜூலை 16 ;தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேரூராட்சி அசனார்நகர் பகுதியில் பொது நிதி ரூ.28.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட உள்ளுர் குடிநீர் திட்ட பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.  
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேரூராட்சி அசனார்நகர் பகுதியில்; பொது நிதி ரூ.28.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட உள்ளுர் குடிநீர் திட்ட பணிகளை துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, கயத்தார் பேரூராட்சி அசனார்நகர் பகுதியில் ரூ.28.50 லட்சம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள உள்ளுர் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.  
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  தெரிவித்தாவது:
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் கயத்தார் பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடும் வகையில் அசனார்நகர் பகுதியில் பொது நிதி ரூ.28.50 லட்சம் மதிப்பில்  உள்ளுர் குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அசனார் பகுதியில் 47 செண்ட் நிலத்தில் அமைந்துள்ள திறந்த வெளி கிணற்றில் இருந்து வார சந்தை வளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும், இந்திராநகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிற்கும் கூடுதல் குடிநீர் குழாய் பதித்தல் பணிகளும், திறந்தவெளி கிணற்றை தூர்வாரி புதிதாக மின்மோட்டார்களை பொறுத்தி தினசரி 2 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் 11 வார்டுகளில் உள்ள 10,400 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். மாண்புமிகு அம்மாவின் அரசு பொதுமக்களின் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வருகிறது. பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கயத்தாறு முதல் கழுகுமலை செல்லும் சாலையில் 0/4-ல் 700 மீட்டர் நீளம் ரூ.3.85 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தினை திறந்து வைத்தை தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக கயத்தார் பேரூராட்சி அசனார்நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டினார். 
நிகழ்ச்சியில்  கயத்தார் வட்டாச்சியர் பாஸ்கரன், கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், கயத்தாறு பேருராட்சி செயல் அலுவலர் ஜோதிபாஸ், கயத்தாறு பேருராட்சி தொகுப்பு உதவி பொறியாளர் அன்னம், உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) லோகராஜன், முக்கிய பிரமுகர்கள் வண்டானம் கருப்புசாமி, குருராஜ், வினோபாஜி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo