Onetamil News Logo

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Onetamil News
 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு   


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 13 ;தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்று கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் - பூவனாநாதசுவாமி திருக்கோவில். வெம்பக்கோட்டைய அரசாண்ட செண்பக மன்னன், களக்காட்டினை வெட்டி சீர்படுத்தி செண்பகவல்லியம்மன் திருக்கோவிலையும், கோயிற்புரி என்றழைக்கப்பட்ட கோவில்பட்டி நகரையும் உருவாக்கினார் என்று தல வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. சுவாமி சன்னதி முன்பு 7 நிலைகள் கொண்ட ராஜ கோபுரமும், கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் வசந்த உற்சவிழா, ஆடிப்புரவாளைகாப்பு விழா, நவராத்திரி விழா, ஐயப்பசி திருக்கல்யாண திருவிழா, பங்குனிதிருவிழா ஆகியவை திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களில் மிகவும் முக்கியமான திருவிழா பங்குனி பெருந்திருவிழாதான். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்மவார் சங்க மண்டகப்படிதாரர் சார்பில் திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதையெடுத்து சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை தொடர்ந்து திருத்தேரோட்டத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மற்றும் மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.மேள தளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்களுடன் முதலில் அம்பாள் திருத்தேரும், 2வதுதாக சுவாமி திருத்தேரும் நான்கு ரதவீதிகளில் இழுக்கப்பட்டது. பக்தர்களின் கூட்ட வெள்ளத்தில் 2 திருத்தேர்களும் உலா வந்தது நிலையை அடைந்தது. நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை மறுநாள் தெப்பத்திருவிழாவும் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo