Onetamil News Logo

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே - தமிழிசை சௌந்தராஜன்

Onetamil News
 

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே - தமிழிசை சௌந்தராஜன்


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 18 ;தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அங்கு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் மதியம் வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பதை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அவருடன் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ .ராஜு உடனிருந்தார்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது...., தூத்துக்குடி மக்களவை மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தல் எங்களது கூட்டணிக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது. நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். இந்தத் தொகுதி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே. மக்களுக்கு அவர்கள் (திமுக, அமமுக) பணத்தை வழங்கியுள்ளனர். நாங்கள் அன்பையும், நம்பிக்கையையும் வழங்கியுள்ளோம்.
இந்த தொகுதியில் அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சிக்கு நாங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளோம். அவர்கள் அளித்துள்ளது தற்காலிக உதவி. நாங்கள் வழங்கியுள்ளது நிரந்தர உதவி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் யாருக்கும் வாக்களிக்க பணம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் மக்களே திமுகவும், அமமுகவும் பணம் வழங்கியதாக கூறுகின்றனர்.
எனக்கு இதில் என்ன கவலை என்றால், அவர்கள் இருவரும் அதிகமாக பணம் வைத்துள்ளனர். ஆனால் மக்களுக்கு குறைவாக கொடுத்துள்ளனர். இங்குள்ள மக்கள் தேசியப் பற்று மிக்கவர்கள். அதனால் தெளிவாக தேசப்பற்றுடன் வாக்களிப்பார்கள் என்பது எனது கருத்து, என்றார் அவர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo