Onetamil News Logo

அனைத்து பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி 

Onetamil News
 

அனைத்து பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி 


தூத்துக்குடி 2020 ஜூலை 16 ;தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில்  கொரோனா நோய்த் தொற்று காலத்தில், அனைத்து பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவியருக்கு உலர் உணப்பொருட்களாக அரிசி மற்றும் பருப்பு வழங்கி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உலர் உணப்பொருட்கள் வழங்கும் பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  துவக்கி வைத்தார்.  
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில்  கொரோனா நோய்த் தொற்று காலத்தில், மே 2020 மாதத்திற்குரிய உலர் உணப்பொருட்களாக அரிசி மற்றும் பருப்பு அனைத்து பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி சத்துணவு மையங்;களில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவியருக்கு மே மாதத்திற்கான உலர் உணப்பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்று காலத்தில் சமுதாயத்தில் பின்தங்கிய அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாய விலைக் கடை மூலம் விலையில்லா அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு பல்வேறு தொழிலாளர்களுக்கு நிவாரண தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், கொரோனா நோய்த் தொற்று காலத்தில், பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ மாணவியருக்கு உலர் உணப்பொருட்களாக அரிசி மற்றும் பருப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தலா அரிசி  3100 கிராம், பருப்பு  1200 கிராம், உயர் நிலை பள்ளி மாணவ மாணவியருக்கு தலா அரிசி  4650 கிராம், பருப்பு  1250 கிராம் வழங்கப்பட உள்ளது.  
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர்கள் அல்லது மாணவ/மாணவியர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி சத்துணவு மையங்களுக்கு நேரில் சென்று உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,001 துவக்கப்பள்ளியில் உள்ள 56,707 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், 321 உயர் துவக்கப்பள்ளியில் உள்ள 33,423 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 1,322 பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு உண்ணும் 90,130 மாணவ, மாணவியர்களுக்கு 331.20 மெட்ரிக் டண் அரிசியும், 109.83 மெட்ரிக் டண் பருப்பும் வழங்கப்படுகிறது.  சத்துணவு மையங்;களில் சத்துணவு உண்ணும் மாணவ மாணவியர்கள் அரிசி மற்றும் பருப்பினை பெற்று பயனடையுமாறும், பொதுமக்கள் அத்யாவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து முககவசங்கள் அணிந்து வெளியில் வருமாறும், அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்;; எனவும் தெரிவித்தார்;.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம், கயத்தார் வட்டாச்சியர் பாஸ்கரன், கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெயராஜ்;, பொது செயலாளர் எஸ்.எ.டி.காளிராஜன், பொருளாளர் அருணாசலம், முன்னால் கடம்பூர் பேருராட்சி தலைவர் எஸ்.பி.எஸ்.பி.நாகராஜன், முக்கிய பிரமுகர்கள் வண்டானம் கருப்புசாமி, குருராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo