Onetamil News Logo

கோவில்பட்டி இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் ;கொலைமிரட்டலுக்கு 7ஆண்டு ஜெயில்  கோர்ட் தீர்ப்பு 

Onetamil News
 

கோவில்பட்டி இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் ;கொலைமிரட்டலுக்கு 7ஆண்டு ஜெயில்  கோர்ட் தீர்ப்பு 


தூத்துக்குடி  2019 செப் 13: கோவில்பட்டியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் குருசாமி (வயது 43). இவர் பன்றிக்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த உத்தண்டராமன் மகன் செண்பகராஜ் (35), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த காசி என்ற சிவாஜி மகன் செந்தில்குமார் (28) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் பன்றியை கோவில்பட்டி அண்ணாநகர் பகுதியில் வைத்து தீயில் வாட்டி எடுத்து, அதன்பிறகு கறியை கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக, கோவில்பட்டி வீரவாஞ்சிநகரை சேர்ந்த அரசு ஆஸ்பத்திரி டிரைவர் முருகன் (45), அவருடைய உறவினர் நகராட்சி உதவியாளர் பாலமுருகன் (36) ஆகியோர் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் குருசாமியை எச்சரித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 6-11-13 அன்று குருசாமி, முருகனை பேச்சுவார்த்தைக்காக அழைத்து உள்ளார். இருவரும் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தபோது அவர்களை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.
பின்னர் மூன்று பேரும்  சேர்ந்து முருகனையும், பாலமுருகனையும் சரமாரியாக கத்தி, அரிவாள் போன்றவற்றால் வெட்டியும், சரமாரியாக குத்தியும் தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள்.
இந்த இரட்டைக் கொலை வழக்கு குறித்து குருசாமி, செண்பகராஜ், செந்தில்குமார் ஆகியோரை  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் விசாரனை செய்து கைது செய்து  நடைபெற்று வந்த வழக்கில் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவஞானம்  இன்று  தீர்ப்பளித்தார்.   தூத்துக்குடி கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.அதில் கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவஞானம்  வழங்கிய தீர்ப்பில் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கொலைமுயற்சி செய்த குற்றத்திற்கு 7  ஆண்டும்,தலா ரூ. 6.500 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக  யூ.எஸ்.சேகர்  ஆஜரானார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo