Onetamil News Logo

2021வரை அதிமுக ஆட்சி தான், அதன் பின்பு எங்கள் ஆட்சி தொடரும் தமிழகத்தில் என்றைக்கும் திராவிட கட்சிகள் ஆட்சி தான் நீடிக்கும் 

Onetamil News
 

2021வரை அதிமுக ஆட்சி தான், அதன் பின்பு எங்கள் ஆட்சி தொடரும் தமிழகத்தில் என்றைக்கும் திராவிட கட்சிகள் ஆட்சி தான் நீடிக்கும்   


                                                                                                                                                          கோவில்பட்டி  2019 ஜூலை 11 ;2021வரை அதிமுக ஆட்சி தான், அதன் பின்பு எங்கள் ஆட்சி தொடரும் தமிழகத்தில் என்றைக்கும் திராவிட கட்சிகள் ஆட்சி தான் நீடிக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.      
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கட்டலாங்குளத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 309 பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் அங்குள்ள நினைவு மண்டபத்தில் இருக்கும் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதை போன்று அழகுமுத்துக்கோன் வாரிசுகள், பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனை தொடர்ந்து அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, மகளிர்குழுவினருக்கு கடன் உதவி தொகை, அம்மா இருசக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ. ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, வீரன் அழகுமுத்து கோன் அரண்மனையை பராமரிக்கவும், அவரது வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் அதிமுக அரசு நிச்சயமாக பரிசீலினை செய்யும்.
தமிழகத்தில் எந்தவொரு பிரச்சினைக்கு உடனுக்கு உடன் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆணவ கொலைகள் ஆங்காங்கே உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப உணர்ச்சிபூர்வமான நிலையில் திடீரென ஏற்படுகிறது. ஆனாலும், இப்படிப்பட்ட நிலைகள் பெரிதாக நடக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீட் தேர்வு குறித்து அரசிதழில் வெளியிட்டவர்கள் காங்கிரஸ் - திமுக கூட்டணி தான். அப்போதே முதல்வர் ஜெயலலிதா, அதிமுக மக்களவை உறுப்பினர்கள் எதிர்த்தனர். எனவே, நீட் தேர்வுக்கு வித்திட்டவர்கள் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இதனை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாரதிய ஜனதா அரசு நடைமுறைபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீட் தேர்வு குறித்து கடந்த ஒரு வாரமாக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. டி.டி.வி. தினகரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவரது வாதத்தை சட்டமன்றத்துக்கு வந்து பேசியிருக்கலாம். சட்டமன்ற நடவடிக்கையில் பங்கு பெறலாமல் வெளியே கூறும் கருத்துகளுக்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க முடியாது, என்றார் அவர்.
கர்நாடாக, கோவா நிலைமை தமிழகத்திற்கு வருமா ? என்ற கேள்விக்கு
அது கற்பனையான கேள்வி, 2021வரை அதிமுக ஆட்சி தான், அதன் பின்பு எங்கள் ஆட்சி தொடரும் தமிழகத்தில் என்றைக்கும் திராவிட கட்சிகள் ஆட்சி தான் நீடிக்கும் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo