Onetamil News Logo

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் வைகாசி விசாக திருவிழா

Onetamil News
 

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் வைகாசி விசாக திருவிழா


கழுகுமலை 2019 மே 19 ;கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் வைகாசி திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தென்தமிழகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரைக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா சென்ற வாரம் வெள்ளி (10ம் தேதி) காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி கடந்த 8 நாட்களாக கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு, இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வந்து வசந்த மண்டகபடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் உச்சகட்ட வைகாசி திருவிழாவிற்காக நேற்று மாலை 6 மணிக்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராம மக்களும், பக்தர்களும் கழுகாசலமூர்த்தி கோயிலிலிருந்து தொடங்கி கிரிவலப் பாதை முழுவதும் கும்பிடு சேவை நேர்த்திக்கடன் செலுத்தி கோயிலை வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜை, மற்ற பிற கால பூஜைகள் நடந்தன. காலை 8 மணிக்கு மேல் மதுரை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தேனி ஆகிய ஊர்களை சேர்ந்த பக்தர்களும், 11 மணிக்கு மேல் அய்யாபுரம், சம்பாகுளம், கரடிகுளம், வேலாயுதபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமப் பொது மக்களும் சேர்ந்து பால்குடம், காவடி எடுத்து கிரிவலம் சுற்றி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம் 12 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்திக்கு பால் அபிஷேகமும், மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் குளிர்பானங்கள், மற்றும் அன்னதானமும் ஆங்காங்கே வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை 6மணிக்கு பௌர்னமி கிரிவலம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதிவுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், செண்பகராஜ், சீர்பாதம் தாங்கிகள், பிரதோஷ குழு முருகன், கிரிவலக்குழு தலைவர் மாரியப்பன், மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo