Onetamil News Logo

தொழிற்சங்கங்கள் மறியலில் 20 பெண்கள் உட்பட 161 பேர் கோவில்பட்டியில் கைது 

Onetamil News
 

தொழிற்சங்கங்கள் மறியலில் 20 பெண்கள் உட்பட 161 பேர் கோவில்பட்டியில் கைது 


கோவில்பட்டி 2018 ஜனவரி 10 ;மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி வசூலை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் பெயரில் அடிக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக 21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 2 நாள்களாக வேலை நிறுத்த போராட்டம்  நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டியில்  இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சிஐடியு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் பயணியர் விடுதியில் இருந்து இளையரசனேந்தல் சாலை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். 
போராட்டத்தில் பங்கேற்ற ஏஐடியுசி மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், மாவட்ட செயலாளர் டி.ஜானகி, சிஐடியு மாவட்ட தலைவர் மோகன்தாஸ், தொ.மு.ச. பூல்பாண்டி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகர், இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் வி.பாலமுருகன், ஏஐடியுசி கட்டடத்தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.சேது, பாரதி கூட்டுறவு நூற்பாலை ஏஐடியுசி கிளை செயலாளர் காளியப்பன், தலைவர் கோபால், விளாத்திகுளம் தலைவர் பிச்சை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க எம்.லட்சுமணன், ஒன்றிய செயலாளர் ஏ.லெனின், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஆர்.முருகன், ஒன்றிய செயலாளர் எல்.பி.ஜோதிபாசு மற்றும் 20 பெண்கள் உட்பட 161 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo