Onetamil News Logo

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்ட வியாபாரிகள்

Onetamil News
 

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்ட வியாபாரிகள்


தூத்துக்குடி 2018 ஜூன் 13 ; ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்ட வியாபாரிகள் பரபரப்பு ஏற்பட்டது. 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் நகராட்சி அதிகாரிகள் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுக்கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
வியாபாரிகள் போராட்டத்தினை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றமால் திரும்பி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன்முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையில் அதிக ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், பொது மக்கள் வந்த செல்லமுடியாதநிலை இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது, மேலும் வியாபரிகள் ஆக்கிரமிப்பு செய்யமால் இருக்க இருபுறமும் கயிறும் அடிக்கப்பட்டது. இதற்கிடையில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளதாகவும், முன்பகுதியில் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, பின்பகுதியில் உரிய முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது வியாபாரிகள் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகள் எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை முற்றுக்கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எல்லா வியாபாரிகளுக்கும் ஒரே மாதிரி இட ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நகராட்சி அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கையினால் 50க்கும் மேற்பட்ட நடைபாதை சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை நகராட்சியில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் தினசரி சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo