Onetamil News Logo

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முழுமையான சம்பளம் வழங்க கோரிக்கை

Onetamil News
 

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முழுமையான சம்பளம் வழங்க கோரிக்கை


கோவில்பட்டி 2019 ஏப்ரல் 23 ; தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முழுமையான சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு இலுப்பையூரணி கிராமத்தை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் யூனியன் ஆபிஸ் முன் திரண்டனர். பின்னர், வடக்கு இலுப்பையூரணி கிராமத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.110 தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இது வரை முழுமையான சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தில் அனைவருக்கும் தினமும் முறையாக வேலை வழங்காமல், சுழற்சி முறையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்க பாரத ஸ்டேட் பேங்கில்  மட்டும் தான் கணக்கு தொடங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே, ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும். முறையாக வேலை வழங்க வேண்டும். சம்பளம் வரவு வைக்க அனைத்து வங்கிகளிலும் கணக்கு தொடங்க அனுமதிக்க வேண்டும். பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஊரக வேலை வாய்ப்பு திட்ட துணை பி.டி.ஓ., கோபுவிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo